UPI பரிவர்த்தனைகள் இலவசமாகவே இருக்கும் என கூறமுடியாது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா UPI May Not Be Free Forever RBI Governor clarifies UPI stance
UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை. UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா தெரிவித்துள்ளார்
இன்று சென்னையில் நடந்த MPC கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில்,
யுபிஐக்கு செலவுகள் உள்ளன, அவை யாராவது ஒருவரால் ஏற்கப்பட வேண்டும். நான் யுபிஐ இலவசமாக இருக்கும் என்று ஒருபோதும் உறுதியளிக்கவில்லை,” என்று கூறினார்.
தற்போது அரசு மற்றும் வங்கிகள் மானியமளித்து யுபிஐயை இயக்கி வருவதாகவும், இந்த மாதிரி நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்குமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜூலை 2025-ல் நடந்த பைனான்சியல் எக்ஸ்பிரஸ் BFSI உச்சி மாநாட்டில், மஹோத்ரா யுபிஐயின் நிலைத்தன்மை குறித்து முதலில் கவலை தெரிவித்திருந்தார். “யுபிஐ இலவசம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் இதற்கு செலவுகள் உள்ளன.
Tags: இந்திய செய்திகள்
