Breaking News

மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு வீடியோ பார்க்க TVK Madurai Manaadu

அட்மின் மீடியா
0

மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியது என்ன முழு வீடியோ பார்க்க TVK Madurai Manaadu

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. 

அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடந்தது

புதிய பாடல்:-

த.வெ.க தலைவர் விஜய் குரலில், தமன் இசையில் "உங்கள் விஜய் உயிரென வரட்டா" என்கிற பாடல் ஒலிக்க, மாநாடு மேடைக்கு வருகை தந்தார் தலைவர் விஜய். மேடை ஏறியவுடன் மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த பெற்றோரிடம் விஜய் வாழ்த்து பெற்றார். விஜயை கட்டியணைத்து பெற்றோரும் வரவேற்றனர். 

புதிய பாடல் கேட்க:-

https://x.com/vj_kazahagam/status/1958507674632597794

ரேம்ப் வாக்:-

மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் உங்கள் விஜய் உயிரென வரட்டா பாடல் பின்னணியில் ஒலிக்க, விஜய் பிரத்யேக நடைமேடையில் தவெக கொடியை தலையில் கட்டிக்கொண்டு நடந்து வந்தார்.

தீர்மானம்:-

மதுரை தவெக மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை கண்டித்து தீர்மானம்

2026 சட்டமன்ற தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானம்

தமிழக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம்

ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பாமல் TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பக்கோரி தீர்மானம்

விஜய் பேசியது:-

தவெக தலைவர் விஜய் இந்த மாநாட்டில் சுமார் 35 நிமிடங்கள் பேசியுள்ளார்.

சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளிய வரும்... வேடிக்கை பாக்கலாம் வராது. சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும். சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் போன்று போர் குணம் கொண்டவர் விஜயகாந்த். மதுரையில் கால் வைத்ததும் ஒருவர் பற்றித்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எம்ஜிஆர் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் விஜயகாந்த்துடன் பழக முடிந்தது. இந்த மதுரை மண்ணின் மைந்தன் விஜய்காந்த்.

1967 மற்றும் 1977ல் நடைபெற்ற அரசியல் மாற்றம், 2026லும் நிகழப்போகிறது. அதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த மாநாடு. இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒற்றை தமிழனின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். இது அனைவருக்குமான உரிமைக் குரல். சமநீதி, சமூகநீதிக்கான குரல் இது. யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டுக்காக மட்டும் அல்ல. ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். நம் கொள்கையில் சமரசம் இல்லை. பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? அடிமை கூட்டத்தில் சேர என்ன என்ன தேவை?2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் போட்டி. ஒன்று திமுக மற்றொன்று தவெக. " என்றார்.

ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர்; அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல... மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும். மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது. 

அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும் தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்! கொள்கையை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதா.. எதிர்க்கட்சியாக இருக்கும் போது போங்க மோடி, ஆளுங்கட்சியாக வந்த பிறகு வாங்க மோடி! 

தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழ் நாடு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது பாஜக ஒன்றிய அரசு

நான் ஒன்றும் மார்க்கெட் போனபிறகு ரிட்டையர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. 2026-ல் நான் தான் ஆட்சி அமைப்பேன். 234 தொகுதியிலும் நான் தான் போட்டியிடப்போறேன். உங்க வீட்ல இருக்குற ஒருத்தர் தான் வேட்பாளரா நிற்கப்போகிறார். அந்த வேட்பாளரும், நானும் வேறு வேறு இல்லை. அவருக்கு ஓட்டு போட்டா, எனக்கு ஓட்டு போட்ட மாதிரி. 

தூத்துக்குடி ஸ்னோலினின் அம்மா என்னை தன் தம்பி என்றார். நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம். என் கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது” என்றார்.

காமராஜரை தோற்கடித்தவங்க சினிமாக்காரங்க இல்லை, அரசியல்வாதி. அதனால அரசியல்வாதிகள் அறிவாளிகளும் இல்லை, சினிமாக்காரங்க முட்டாள்களும் இல்லை. 

மோடி அவர்களே நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா? 

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்படததை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர். 2026ல் யாருக்கு ஓட்டு போடனும்னு அந்த அப்பழுக்கற்ற அதிமுக தொண்டர்களுக்கு நல்லாவே தெரியும்.

அவரே அரசியலுக்கு வரவில்லை. இவர் எப்படி வருவார் என்றார்கள். விஜய்க்கு கூடும் கூட்டம் எப்படி ஓட்டாகும் எனார்கள். மக்கள் விரோத ஆட்சியை அகற்றும் ஓட்டுகள் தான் என் தொண்டர்கள். என் வீட்டு ரேஷன்கார்ட்ல வேணும்னா உங்க பெயர் இல்லாம இருக்கலாம், உங்க வீட்டு ரேஷன்கார்ட்ல வேணும்னா என் பெயர் இல்லாம இருக்கலாம், ஆனா நாம எல்லாரும் ஒன்னு தான், நீங்க எல்லாரும் என்னுடைய ரத்த உறவு... 

234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர். அப்படினு நினைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாழ்நாள் முழுக்க மக்களுக்காக உழைப்பதை தவிர வேறு எண்ணம் இல்லை. எனக்கு இப்போது வேறு வேலையும் இல்லை. கூடிய சீக்கிரம் மக்களை போய் சந்திக்கப் போறேன். அவங்களோடு மனசு விட்டு பேசப் போறேன். அதுக்கு அப்புறம் இந்த சாதாரண முழக்கம், இடிமுழக்கமாக மாறும்" என்றார்.

எம்.ஜி.ஆர் யார் தெரியும்ல? அவர் மாஸ் என்னன்னு தெரியும்ல? அவர் உயிரோட இருந்தவரை, முதல்வர் சீட்டை யாராலயும் அடைய முடியல. எப்படியாவது முதல்வர் சீட்டை எனக்கு கொடுங்க, என் நண்பர் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர். இன்று எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அந்த கட்சி எப்படி இருக்கு? அதை நினைத்து அந்தக் கட்சி தொண்டர்கள் நொந்துபோய் இருக்காங்க. வெளிய சொல்ல முடியாம இருக்காங்க. பாஜகவோட கூட்டணி வைத்திருப்பதால, ஆட்சிக்கு வந்துவிட முடியாது

பெண்கள், பெண் குழந்தைகள், வயதானவர்களின் பாதுகாப்பு தான் நமக்கு முக்கியம். அனைவருக்குமான ஒரு அரசு அமைப்பதே நம் இலக்கு. த.வெ.க அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சியல்ல. கொள்கை, கோட்பாடோடு தொடங்கப்பட்ட கட்சி. நம் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக. இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கட்சத்தீவை மீட்டுக்கொடுத்துவிடுங்கள் பிரதமர் மோடி அவர்களே, எங்களுக்கு அது போது. நீட் தேர்வு தேவை இல்லை என அறிவித்துவிடுங்கள், அதுபோது. செய்வீர்களா நரேந்திரபாய் தாமோதர மோடிஜி அவர்களே? மோடியின் முரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மக்களின் கதறல் சத்தம் கேட்கிறதா ஸ்டாலின் அங்கிள்? ஸ்டாலின் அன்கிள்... மக்களை ஏமாற்றுறீங்க, மீனவர்களை ஏமாற்றுறீங்க. பெண்களுக்கு பாதுகாப்பு தருவதா ஏமாற்றுறீங்க. வாட் அன்கிள்? வெரி வெரி வர்ஸ்ட் அங்கிள்” என விமர்சித்தார்.

              

குட்டிக்கதை:-

ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக, துணையாக இருப்பதற்காக தளபதியைத் தேடுகிறார். சரியான தகுதிகளோடு 10 பேர் தேர்வாகிறார்கள். ஆனால், ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், அதனால் ராஜா என்ன செய்கிறார் என்றால், 10 பேருக்கும் ஒரு போட்டி வைக்கிறார்.விஜய்அந்த 10 பேர் கைகளிலும் விதை நெல்லைக் கொடுத்து, மூன்று மாதம் கழித்து வளர்த்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். 

3 மாதம் கழித்து ஒருவர் ஆள் உயரத்துக்கும், ஒருவர் தோள் உயரத்துக்கும், ஆக 9 பேரும் விதையைச் செடியாக வளர்த்துக் கொண்டு வந்தனர்.ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை மட்டும் எடுத்து வந்தார். 

அவர் ராஜாவிடம் தண்ணீர் ஊற்றியும் பார்க்கிறேன், உரமிட்டும் பார்க்கிறேன், ஆனால் விதை வளரவில்லை எனக் கூறினார். அதற்கு ராஜா, அவரைக் கட்டிணைத்து நீதான் என் தளபதி, அனைத்து அதிகாரமும் உனக்குதான் எனக் கூறினார். அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல், முளைக்கவே முளைக்காது.

அந்த 9 திருட்டுப்பயலுகளும் என்ன செய்து இருக்கிறார்கள் என்றால், வேற விதை நெல்லை வாங்கி, அதை வளர்த்து ராஜாவையும் மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இவர் மட்டும் உண்மைப்போட்டு உடைத்துள்ளார்.

அதுபோல, ஒரு நாட்டுக்கு திறமை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நேர்மையும் உண்மையும் முக்கியம். நீங்கள் அனைவரும் ராஜா, நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்தத் தளபதி...." என கூறினார்

முழு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/live/YDU7sWkOjUo?si=rcA5cnFjYejf9g8H

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback