Breaking News

திருப்பூரில் SSI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளி என்கவுன்ட்டர்

அட்மின் மீடியா
0

திருப்பூரில் SSI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளி என்கவுன்ட்டர்

        

திருப்பூரில் SSI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் - கொலையாளி என்கவுன்ட்டர்திருப்பூரில் விசாரணைக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொன்ற கொலையாளி மணிகண்டன் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும் அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். 

இருவரும் நேற்று முன் தினம் இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டு அவர் அங்கு சென்ற போது ஆத்திரமடைந்த தங்கபாண்டி, நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்தார். 

உடன் இருந்த ஓட்டுநரையும் துரத்திச் சென்றுள்ளார். அவர் தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தங்கபாண்டியன் , மூர்த்தி உள்ளிட்ட 3 பேரை 5 தனிப்படைகள அமைத்து தேடி வந்தனர். பின்னர் மூர்த்தியும் , தங்க பாண்டியனும் நேற்று(ஆக6) திருப்பூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த மணிகண்டனை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் போலீசார் சுட்டதில் உயிரிழந்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback