Breaking News

பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் திடீர் மரணம் RIP Madhan Bob

அட்மின் மீடியா
0

 பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்


புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார் 

அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

குணச்சித்திர நடிகர் மதன் பாப் இயற்பெயர்: கிருஷ்ணமூர்த்தி, திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர் மதன் பாப், தமிழில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை' திரைப்படம் மூலம் அறிமுகமானார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback