இந்தியாவின் திடீர் No.1 பணக்காரர் வங்கி கணக்கில் வந்த 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ரூபாய் முழு விபரம்
இந்தியாவின் திடீர் No.1 பணக்காரர் வங்கி கணக்கில் வந்த 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ரூபாய் முழு விபரம்
உத்தரப்பிரதேசம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், 2 மாதங்களுக்கு முன் இறந்து போன தன் தாயின் வங்கிக் கணக்கை சோதித்த போது அதில் 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ரூபாய் கிரெடிட் ஆகியிருந்தது கண்டு அதிர்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தீபக் என்பவர், தனது தாயார் இறந்த பிறகு, அவருடைய வங்கிக் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோடக் மஹிந்திரா வங்கியின் கடன் பிரிவிலிருந்து, ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ. 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 என்ற மிக அதிக தொகை உள்ளதாக அவருக்குத் தகவல் வந்துள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது
கோடக் மஹிந்திரா வங்கி இந்த சம்பவத்தை மறுத்துள்ளது.
ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் வழக்கத்திற்கு மாறாக பெரிய இருப்பு இருப்பதாகக் கூறும் ஊடக அறிக்கைகள் தவறானவை. இந்த அறிக்கைகளின் வெளிச்சத்தில், வாடிக்கையாளர்கள் கோடக்கின் மொபைல் வங்கி செயலி அல்லது நெட் பேங்கிங் தளங்களைப் பயன்படுத்தி தங்கள் கணக்கு விவரங்களைச் சரிபார்க்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
கோடக் மஹிந்திரா வங்கி அனைத்து சேவைகளும் பாதுகாப்பானவை மற்றும் முழுமையாக செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது,
மேலும் அந்தப் பதிவு, கணினியில் ஏற்பட்ட தவறான நுழைவு (erroneous entry) காரணமாக இருக்கலாம் என்றும், கணினியில் ஏற்பட்ட பிழை காரணமாக அந்தத் தொகை தவறாகப் பதிவாகியிருக்கலாம் என்றும் வங்கி விளக்கமளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகள் உண்மை இல்லை என்றும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு வாடிக்கையாளர்களுக்கு எந்தவித நிதி இழப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்
