குவைத் அரச இளவரசர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என பரவும் செய்தி உண்மையா ? பொய்யா? Kuwaiti Prince Converts to Christianity | Fact Check
குவைத் அரச இளவரசர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் என பரவும் செய்தி உண்மையா ? பொய்யா? Kuwaiti Prince Converts to Christianity | Fact Check
சமூகவலைதளங்களில் பரவும் செய்தி:-
குவைத் நாட்டின் அரச இளவரசர் அப்துல்லா அல்-சபா இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாக சமூக ஊடகங்களில் ஓர் செய்தி பரவிவருகின்றது.
Recently, Christians influencers have been relaying some very weird news about an alleged Kuwaiti prince named Abdullah Al-Sabah who left Islam and became Christian.
உண்மை என்ன:-
இளவரசர் அப்துல்லா அல்-சபா பகிரங்கமாக இஸ்லாத்தைத் துறந்து கிறிஸ்தவத்தைத் தழுவினார் என்று பரவி வரும் இந்தக் செய்தி முற்றிலும் தவறானது.
மேலும் அந்த வதந்தி செய்தி கடந்த 2012 ம் ஆண்டு முதல் அவ்வப்போது பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்
FAKE NEWS.
There is no reliable evidence that a Kuwaiti prince has recently converted to Christianity. The rumor mainly originates from an audio recording allegedly by a man named “Prince Abdullah Al‑Sabah,” in which he supposedly renounces Islam and professes faith in Jesus. However, all signs point to it being a hoax or fake news
The Kuwaiti government and members of the Al‑Sabah royal family have strongly denied the existence of a prince with that name
செய்தியில் உள்ள தவறு 1:-
அப்துல்லா அல்-சபா என்ற பெயரில் குவைத் அரச இளவரசர் யாரும் இல்லை
குவைத் நாட்டில் வெவ்வேறு பதவிகளில் ஆட்சி செய்யும் அரச குடும்பத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்களின் பட்டியலில் அப்துல்லா என்ற பெயர் இல்லை
மேலும் அத்தகைய நபர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக எந்தவொரு செய்தியும் இல்லை.
செய்தியில் உள்ள தவறு 2:-
பலரும் ஷேர் செய்யும் அந்த பொய்யான செய்தியுடன் உள்ள புகைப்படம், அப்துல்லா அல்-முபாரக் அல்-சபா என்ற குவைத் பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் ஆளும் அல் சபா குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக அடையாளம் காட்டுகின்றன.
அவர் 2009 முதல் 2011 வரை எண்ணெய் அமைச்சராகப் பதவி வகித்தார். சமீபத்தில், ஏப்ரல் 15, 2024 அன்று, அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார், அதிகாரப்பூர்வமாக மே 15, 2024 அன்று தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார்.அவர் குவைத்தின் சுற்றுலாத்துறை பொறுப்பாளராக உள்ளார்,
மேலும் அவர் மதமாற்றம் செய்தார் என்ற எந்த தகவலும் இல்லை அவருக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
செய்தியில் உள்ள தவறு 3:-
பலரும் ஷேர் செய்யும் அந்த பொய்யான செய்தியுடன் கொடுக்கப்பட்ட பெயர் அல்-சபா, ஆனால் அது ஒரு குறிப்பிட்ட பெயர் அல்ல. இது பொதுவானது. ஹவுஸ் ஆஃப் உசாபா என்பது குவைத் அரச வம்சத்தின் பெயர்,
ஆனால் அந்தப் பெயர் ஒருபோதும் குடும்பத்தில் உள்ள எவருக்கும் தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இது எப்போதும் மற்ற பெயர்கள் மற்றும் பட்டங்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, தற்போது குவைத்தை ஆளும் அமீர் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா ஆவார்.
முடிவு:-
இந்த பொய்யான வதந்தி செய்தி 2012 ம் ஆண்டு முதல் பரவி வருகின்றது. எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்:-
Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி
