இறந்தவர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி வைரலாகும் வீடியோ Rahul Gandhi has tea with dead people
இறந்தவர்களோடு தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது இதற்க்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Rahul Gandhi has tea with 'dead people.'
வாழ்வில் பல சுவாரஸ்ய அனுபவங்கள் கிடைத்தன; ஆனால் இறந்தோருடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்ததில்லை; இறந்தவர்கள் என கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோரை சந்தித்ததாக ராகுல் பதிவிட்டுள்ளார்.
There have been many interesting experiences in life, but I never got the chance to have tea with 'dead people.' For this unique experience, thank you Election Commission!
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை.இந்த தனித்துவமான அனுபவத்தைத் தந்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!" என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/RahulGandhi/status/1955604054341738876
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
