ஐடி துறையில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கும் தமிழக அரசு CSE, ECE, EEE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஐடி துறையில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கும் தமிழக அரசு CSE, ECE, EEE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு 20,000 பேருக்கு கீழ்க்கண்ட IT துறைகளில் பயிற்சி அளித்து வேலைக்கு எடுக்கிறார்கள்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து, "வெற்றி நிச்சயம்" திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள இந்த திட்டம் மூலம். 21 முதல் 25 வயதுக்குள் உள்ள 20,000 வேலைத்தேடும் இளைஞர்கள் தொழில்துறை சார்ந்த மேம்பட்ட திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
தமிழ்நாடு. குறிப்பாக சென்னை. இந்தியாவின் ஐடி துறையின் முக்கிய மையமாக வளர்ந்துள்ளது. இந்தத் துறையில் தற்போது பத்து லட்சத்த்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கு, தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் பின்வரும் துறைகளில் வழங்கப்படவுள்ளது:
Networking and Cybersecurity Essentials (CISCO)
Microsoft Power BI Data Analytics
Microsoft Azure Artificial Intelligence Engineer
Robolic Process Automation (UlPath)
Salesforce Platform Developer
Salesforce Administrator
Google Cloud Engineer
MongoDB Associate Developer
Premier Banker
Angular JS
J2EE Programming
Asp.Net Programming
Advanced Python Programming
Data Analytics using Python
Digital Marketing
இப்பயிற்சி சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம். கோயம்புத்தூர். திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
பயிற்சிக்கான தகுதி:
1. 2022 முதல் 2025 கல்வியாண்டில் CSE, ECE, EEE ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்ற பொறியியல் மாணவர்கள் (அரியர்ஸ் இல்லாமல்).
2. BCA, B.Sc. CS, MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை/அறிவியல் பட்டதாரிகள் (அரியர்ஸ் இல்லாமல்).
3. வேலைக்காக இடமாற்றம் செய்ய தயாராக இருத்தல் வேண்டும்.
"வெற்றி நிச்சயம்" திட்டம் சவால் நிறைந்த தொழில் நுட்ப துறையில் திறமையான இளைஞர்களை உருவாக்கி தமிழ்நாட்டை இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக மாற்றும் ஒரு சீரிய திட்டம். இத்திட்டத்தின் கீழ் 2 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet என்ற இணையத்தளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள "வெற்றி நிச்சயம்" செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet
Tags: வேலைவாய்ப்பு
