Breaking News

இந்தியாவில் மீண்டும் `டிக்டாக்’ செயலி அனுமதியா - மத்திய அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0

இந்தியாவில் மீண்டும் `டிக்டாக்’ செயலி அனுமதியா - மத்திய அரசு விளக்கம்

2020ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் அடிப்படையில் டிக்டாக் உட்பட பல சீன ஆப்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டன. 

சமீபத்தில் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

2020ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் காரணமாக டிக்டாக் உட்பட பல சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. 

கடந்த சில நாட்களாக டிக்டாக் செயலி மீதான தடை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சீனாவின் `டிக்டாக்’ செயலிக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback