Breaking News

பாமக நிறுவனர் ராமதாஸ் மனு தள்ளுபடி அன்புமணியின் பொதுக் குழுவுக்குத் தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
பாமக நிறுவனர் ராமதாஸ் மனு தள்ளுபடி அன்புமணியின் பொதுக் குழுவுக்குத் தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாளை நடைபெறும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான அதிகாரப்பூர்வ பாமக பொதுக்குழுவுக்கு தடை இல்லை.


நாளை ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அன்புமணி பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் , ஆகையால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளார் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவிட்டார்.  ராமதாஸ் - அன்புமணி உடன் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்

அதன்பின்பு நாளை நடைபெறும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான அதிகாரப்பூர்வ பாமக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் நீதிமன்றம் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச நிலையை எட்டுவதற்கான முயற்சியில் அன்புமணியுடன் பேச ராமதாஸ் தயாராக இல்லை. அப்பா மகனிடையே, துரதிஷ்டவசமான ஈகோ சண்டையால் சிக்கல் உருவாகியுள்ளது. 

பொதுக்குழுவுக்கு (உள்ளரங்க கூட்டம்) போலீஸ் அனுமதி தேவையில்லை. சட்ட ஒழுங்கு சிக்கல் வந்தால், காவல்துறை அதை எதிர்கொண்டு இயல்பு நிலையை உறுதி செய்யும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback