Breaking News

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

நீலகிரி மாவட்டத்துக்கு “ரெட் அலர்ட்” – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் அதிக அளவு மழை பொழிய வாய்ப்புள்ளதால் மண் சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback