Breaking News

திருப்பூரில் சோகம் புகாரை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை

அட்மின் மீடியா
0
திருப்பூரில் சோகம் புகாரை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை



மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரில் விசாரிக்க சென்ற எஸ்.ஐ சண்முகசந்தரத்தை எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் பணியாற்றும் 2 பேர் வெட்டி கொலை செய்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

திருப்பூரில் தந்தை மகன் பிரச்னை குறித்து காவல் துறையினர் விசாரிக்க சென்ற போது சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும் அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். 

இருவரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டு அவர் அங்கு சென்ற போது ஆத்திரமடைந்த தங்கபாண்டி, நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்தார். 

உடன் இருந்த ஓட்டுநரையும் துரத்திச் சென்றுள்ளார். அவர் தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடிமங்கலம் போலீஸார் தப்பிச் சென்ற தங்கபாண்டியை தேடி வருகின்றனர். 

கோவை சரக டிஐஜி, திருப்பூர் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback