ரீல்ஸ் வீடியோ எடுக்க அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற மாணவர் விபத்தில் பலி
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சென்னையில் ஜமீன் பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர் ஏ.சி. மெக்கானிக் அப்துல் அகமது .
17 வயதான இந்த சிறுவன் அண்ணனின் மோட்டார் சைக்கிளில், தனது நண்பரான சுஹேல் அகமது வயது 15 ஏற்றிக்கொண்டு பல்லாவரம் சந்தை சாலையில் மின்னல் வேகத்தில் சென்று ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். இரு மோட்டார் சைக்கிள்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவன் சுஹேல் அகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த 4 பேரையும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.