Breaking News

குஜராத்தில் அதிர்ச்சி - பாலியல் வன்கொடுமையை தடுக்க பெண்கள் வீட்டிலேயே பத்திரமா இருங்க... ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்

அட்மின் மீடியா
0

குஜராத்தில் அதிர்ச்சி - பாலியல் வன்கொடுமையை தடுக்க பெண்கள் வீட்டிலேயே பத்திரமா இருங்க... ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய போலீசார்!




குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அகமதாபாத் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில், நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம். இருட்டான ஆள் நடமாட்டமற்ற பகுதிகளுக்கு பெண் நண்பர்களை ஆண் நண்பர்கள் அழைத்து செல்ல வேண்டாம். அங்கு உங்கள் பெண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் என்ன ஆகும்?” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

பாலியல் வன்கொடுமையை தவிர்க்க பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி குஜராத் போக்குவரத்து போலீசார் ஒட்டிய போஸ்டர்கள் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதேவேளை, சாலைப்பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து போலீசார் சார்பில் நோட்டீஸ் ஒட்ட தனியார் தொண்டு அமைப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், அந்த அமைப்பு அனுமதியின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியதாகவும் அகமதாபாத் போலீசார் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback