சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் முழு விவரம் இதோ
அட்மின் மீடியா
0
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் முழு விவரம் இதோ
சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்(06089) ஆக.14ஆம் தேதி இரவு 09.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்; நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில்(06012) ஆக.17ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில்bஇருந்து புறப்படும்
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது - தெற்கு ரயில்வே
சென்ட்ரல் - போத்தனூர் சிறப்பு ரயில்
14-ந்தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும்
14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06027), மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்
மறுமார்க்கத்தில், வரும் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06028), மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்
சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்(06089)
14-ம் தேதி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும்
இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06089), மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்
மறுமார்க்கத்தில் 17-ம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06090), மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்
நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்
17-ம் தேதி, நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும்
17-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06012), மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்
மறுமார்க்கத்தில் 18-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06011), மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்
மங்களூரு முதல் திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
14, 16 ஆகிய தேதிகளில், மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும்
14 மற்றும் 16-ம் தேதிகளில், மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06041), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்
மறுமார்க்கத்தில், 15, 17 ஆகிய தேதிகளில், மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06042), மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்
முன்பதிவு, இன்று (08.08.2025), காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
