Breaking News

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அட்மின் மீடியா
0

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது - எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தார். 



அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன்

கூட்டிவரப்பட்ட கூட்டத்தை கண்டு, தன்னை ஒரு எம்.ஜி.ஆர் போலவும், அம்மையார் ஜெயலலிதா போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

இதற்கு ஒரே ஒரு உதாரணம், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.திராவிட கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை முடிவு செய்வது அவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் சுவிட்ச் டெல்லியில் இருக்கிறது.

டெல்லிக்கு அதிமுக தலைமை கட்டுப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள். திமுக ஆட்சி தொடர்வதற்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். 

அமைப்பு செயலாளர் என்று எனக்கு பதவி கொடுத்தார்கள் ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை, அதனால் தான் விலகி வந்துவிட்டேன். 

அண்மையில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்தார்கள்; இன்று நான் வந்திருக்கிறேன். திராவிட இயக்கத்தை சார்ந்த கட்சி, பெரும்பான்மை பலத்தை உடைய கட்சி, கூட்டணியை அந்தக் கட்சிதான் முடிவு செய்யும். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அதை முடிவு செய்வது டெல்லியாக உள்ளது. 

ஆனால் இன்றைக்கு எந்த அளவிற்கும் பிரச்சனைஇல்லாமல் முன்னேற்ற பாதையில் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயம் 200ஐ தாண்டுவோம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

கூட்டி வரப்பட்ட கூட்டத்தி பார்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமி, தன்னை ஒரு எம்.ஜி.ஆர். போலவோ, ஜெயலலிதா போலவோ தன்னையும் ஒரு பெரிய தலைவர் என நினைத்துக்கொண்டிருக்கிறார். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்று தெரிவித்தார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback