திருமண வரவேற்ற்பு நிகழ்சியில் நடனமாடிய பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அதிர்ச்சி வீடியோ
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஞானம் இவர் சொந்தமாக மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜீவா இந்நிலையில், ஞானம் - ஜீவா தம்பதியர், நேற்று இரவு தங்களது உறவினரின் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாமல்லபுரம் சென்றிருந்தனர்.
அங்கு மணமகள் மற்றும் மணமகனை வரவேற்பதற்காகப் பிரபல பாடகர் வேல்முருகனின் கச்சேரியும் நடைபெற்றது. அப்போது பாடகர் வேல்முருகன் திரைப்பட பாடல் ஒன்றை பாடகர் பாட ஜீவா தனது உறவினர்களுடன் சேர்ந்து மேடையில் நடனமாடியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாகத் திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
இதைத் தொடர்ந்து திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்
இதையடுத்து, சம்பவம்குறித்து தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், ஜீவா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்
https://x.com/PttvNewsX/status/1958122049953575024
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
