Breaking News

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

அட்மின் மீடியா
0
டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு 3 நீதிபதிகள் அமர்வு தடை
.  

டெல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்

டெல்லியில் உள்ள அனைத்து நாய்களையும் 8 வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த தீர்ப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து  உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வு  உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  

அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் தெரு நாய் விவகாரம் தொடர்பான நிலுவையில்  வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.  

தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அதனை கருத்தடை செய்து,உரிய தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதியிலே விடலாம்

அதை வேளையில் மிகவும் ஆக்ரோஷமாகவும், ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை  மீண்டும் பிடிக்கப்பட்ட பொதுபகுதியில் விடக்கூடாது அவற்றை காப்பகங்களில் தனியாக வைத்திருக்க வேண்டும்

பொதுவெளியில் தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது 

தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டும்

தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது

தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback