தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்
தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக , காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், மற்றும் அதபோல் தமிழக போலீஸ் வீட்டு வசதி துறை டிஜிபியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் கடந்த ஆக.29-வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கூடுதலாக டிஜிபி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
