கோவை காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் நடந்தது என்ன முழு விவரம் தெரிந்து கொள்ள
காவல் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! கோவையில் பரபரப்பு
கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்கு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் வந்துள்ளார். தன்னை சிலர் பின் தொடர்வதாக கூறிய நிலையில் பணியில் இருந்த காவலர் இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். காவலர் வேறு பணியில் இருந்த நிலையில், புகார் அளிக்க வந்தவர் காவல் நிலையத்தின் முதலாவது மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்த கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் பணிக்கு போலீசார் வந்த போது, தூக்கு போட்ட நிலையில் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் யார் என்பது குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.
சம்பவம் குறித்து விளக்கம் அளித்த கோவை மாநகர காவல் ஆணையர்.
உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை செய்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. காலையில் பணிக்கு வந்தவர்கள் அறையை திறந்து பார்த்து தான் தெரிகிறது. நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட உள்ளது.
உயிரிழந்த நபர் ராஜன் (60) பேரூர் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளபடும். பணியில் இருந்த காவலர்கள் விசாரணை நடத்தி, கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில நடைபெற்ற தற்கொலை தான் இது. லாக்கப் டெத் கிடையாது" என்று அவர் தெரிவித்துள்ளார்
இந்நிலையில், பெரியகடைவீதி காவல் நிலைய தற்கொலை விவகாரத்தில் தலைமை காவலர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் காவலர் பணியில் இருக்கும் பொழுதே உள்ளே நுழைந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
