வளர்ப்பு நாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த நெசவுத் தொழிலாளி - முழு விவரம்
அட்மின் மீடியா
0
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கொங்கணாபுரத்தில் வசித்து வருபவர் குப்புசாமி. இவர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்துள்ளார். இவர் நெசவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
அவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்து விட்டது. வீட்டில் வளர்த்த நாய் தானே என அலட்சியமாக இருந்ததில் நாய் கடித்ததில் இருந்து தற்போது வரை எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை.
அதற்கான தடுப்பூசியும் போடவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 நாட்களாக ரேபிஸ் தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குப்புசாமி இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக குப்புசாமியின் மகனையும் நாய் கடித்து, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.