Breaking News

தூத்துக்குடியில் பயங்கரம் அண்ணன் தம்பியை கொடூரமாக கொலை செய்து மண்ணில் புதைத்த கும்பல் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பலை தட்டிக் கேட்ட அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்டனர். அண்ணன் மாரிபாண்டி, மாற்றுத்திறனாளி தம்பி அருள்ராஜ் ஆகியோரை கும்பல் அடித்துக் கொன்றது. இருவரை அடித்துக் கொன்று பண்டுகரை பகுதியில் குழி தோண்டி புதைத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.இவர்களில் மாரிப்பாண்டி சமீபத்தில் நடந்த விபத்தில் பார்வையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 28-ம்தேதி அருள் ராஜ் திடீரென மாயமாகியுள்ளார். அவரை வேல்முருகன் தேடிய நிலையில் அவர் கிடைக்காததால் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் நேற்று அங்குள்ள பண்டுகரை ஓடை பகுதியில் நாய்கள் சண்டையிட்டவாறு குறைத்துக் கொண்டிருந்தது.

இதனை அப்பகுதியினர் பார்த்தபோது ஒரு வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இது குறித்து உடனடியாக தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று பண்டுகரை ஒடை பகுதியில் புதைக்கப்பட்ட வாலிபர் உடலை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொன்று புதைக்கப்பட்டது அருள் ராஜ் மற்றும் அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 26-ம் தேதி அருள் ராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. இந்த இரட்டை கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback