Breaking News

சென்னையில் தொடர் மழை பணியின் போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி

அட்மின் மீடியா
0

 சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.



கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார். 

இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். 

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மழை நீா் தேங்கி நின்றது.

இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனா்.இந்த சம்பவம் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நடந்ததாக அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கினார். அத்துடன் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback