Breaking News

தமிழக வெற்றிக்கழக மாநாடு மதுர குலுங்க குலுங்க விடிய விடிய குவியும் தொண்டர்கள்! வைரல் வீடியோக்கள்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக மாநாடு மதுர குலுங்க குலுங்க விடிய விடியக் குவியும் தொண்டர்கள்! வைரல் வீடியோக்கள்




தவெக மாநாடு விஜய்மதுரையில் இன்று தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை முதலே மாநாட்டு திடல் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விடிய விடியத் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 

வெளிமாநிலங்கள் வெளிநாட்டிலிருந்து பெண்களும், ஆண்களும் அதிகளவில் ஆர்வமுடன் மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்துள்ளனர். 

இந்நிலையில் பெண்களின் பாதுகாப்புக்காகத் தனியாக 50 பெண் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், சுமார் 800 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டு திடலில், இரவைப் பகலாக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாலமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.மற்ற கட்சிகளிடமிருந்து வித்தியாசத்தைக் காண்பிக்கும் வகையில் தவெக மாநாட்டில் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாகத் தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், ‘ஆரோ வாட்டர் பிளாண்ட்’ மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய் இரவு 7 மணியளவில் மதுரை மாநாட்டு பணிகளைப் பார்வையிட்டார். 

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்

https://x.com/Maha_Daughter/status/1958172189372600512.

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்

https://x.com/Pokkiri_Victor/status/1958351437714653235

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்

https://x.com/tigerthalapathy/status/1958330169460150562

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்

https://x.com/TvkSouthWing/status/1958374198373655039?t=iF6e9gTGxVbQ9gfbqLSk8Q&s=19

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்


வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback