சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் பலி
சென்னையில் பிட்புல் நாய் கடித்து கீழே விழுந்தவர் பலி
மத்திய அரசு கடந்தாண்டு மார்ச் மாதம் 23 ரக நாய்களைத் தடை செய்து உத்தரவிட்டது. இவற்றில் பிட் புல் ரக நாய்களும் அடக்கம்.இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய்களை வளர்ப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன். இவரது வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்பவர் பிட்புல் நாயை வளர்த்து வருகிறார்.
ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம்., கார்டனை சேர்ந்தவர் கருணாகரன், 48; மாலை 3:00 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
பூங்கொடி என்பவர் வீட்டில் சங்கிலி போட்டுக் கட்டி வைத்திருந்த, 'பிட்புல்' ரக வளர்ப்பு நாய், சங்கிலியை உடைத்து வெளியே வந்தது. அது, திடீரெனக் கருணாகரனின் வலது தொடையில் கடித்து குதறியது .
நாயைப் பிடிக்க வந்த அதன் உரிமையாளர் பூங்கொடியையும் கடித்தது. இதில், பூங்கொடியின் கால் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
இதில், கருணாகரன் மயங்கி விழுந்ததால், அவசர கால '108 ஆம்புலன்ஸ்' வரவழைக்கப்பட்டது. பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள், கருணாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
குமரன் நகர் போலீசார், கருணாகரன் உடலை, பிரேத பரிசோதனைக்காக, கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த பூங்கொடி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அஜராக்கிரதையாக நாய் வளர்த்ததாகப் பூங்கொடி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் நாயைப் பறிமுதல் செய்து தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்
