கன்னியாகுமரியில் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்த தலித் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக வதந்தி உண்மை என்ன
கன்னியாகுமரியில் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்த தலித் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக வதந்தி
பரவும் செய்தி
கன்னியாகுமரியில் தனுஷ் என்ற இளைஞர் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் பொய்யான தகவல்.கடந்த 19.06.2025 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில், “செருப்பாலூர் காவுவிளை காலணி பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 22) தான் காதலித்து வந்த பெண் வீட்டு மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குலசேகரம் போலீஸ் விசாரணை மேற்கொண்டது.அப்போது, தான் காதலித்த பெண் மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்ததால் தனுஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். காவல்துறை விசாரணையிலும் உடற்கூறு பரிசோதனையிலும் அவரது மரணத்தில் வேறு எந்தச் சந்தேகமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
எனவே இது தொடர்பாக வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு குறிப்பிடப்பட்டுள்ளது.வதந்திகளைப் பரப்பாதீர்!
Tags: மறுப்பு செய்தி மார்க்க செய்தி FACT CHECK
