Breaking News

ராமதாஸ், அன்புமணி இருவரும் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

அட்மின் மீடியா
0

ராமதாஸ், அன்புமணி இருவரும் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு


ஆகஸ்ட் 9ம் தேதி அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அன்புமணி பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் , ஆகையால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளார் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்க்டேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வந்து சந்திக்கும்படியும் கட்சி நலன் கருதி இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என்றும், இருவருடன் பேசும்போது கட்சிக்காரர்கள் யாரும் உடன் இருக்கக்கூடாது என்றும் அனைவரின் நலனுக்காகவும், பா.ம.க., நலன் கருதியும், இருவரிடம் நானே பேச்சுவார்த்தை நடத்த போகிறேன்.நீதிமன்ற வேலை நேரம் முடிந்ததும், இருவரும் எனது அறைக்கு வர வேண்டும்.இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.அவர் தெரிவித்துள்ளார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback