Breaking News

சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் திடீரென உடைந்த அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் திடீரென உடைந்ததில் 23 பெண்கள் காயம் அடைந்தனர்.

சவுதி அரேபியாவின் தாயிஃப் அருகே உள்ள ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில், ‘360 டிகிரி சவாரி’ செயல்பாட்டில் இருந்தபோது தரையில் சரிந்து விழுந்தது. சுமார் 40 பேர் பயணித்த ராட்டினம் திடீரென வேகம் அதிகரித்து ராட்டினத்தின் மையக் கம்பம் பாதியாக உடைந்தது. அந்தரத்தில் இருந்து ராட்டினம் தரையில் விழுந்த அதிர்ச்சியில் பயணிகள் அலறி துடித்தனர்.



இதைத் தொடர்ந்து, உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயத்துடன் தப்பிய நிலையில், கவலைக்கிடமாக உள்ள மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ராட்டினம் உடைந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையில், சவாரி பழுதடைந்ததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback