Breaking News

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழை எச்சரிக்கை


ஆக. 13-ல் வடமேற்கு, அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. 

இதன்காரணமாக, அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்றும், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 13 - ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

13 ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.என தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback