ரூ. 500 நோட்டுகள் செல்லாது என பரவும் தகவல் உண்மை என்ன- மத்திய அரசு கொடுத்த விளக்கம்!
ரூ. 500 நோட்டுகள் செல்லாது என பரவும் தகவல் உண்மை என்ன- மத்திய அரசு கொடுத்த விளக்கம்!
சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்:-
ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30, 2025-க்குள் ATM-களில் ரூ. 500 நோட்டுகளை வழங்குவதை நிறுத்தும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
75% ரூ. 500 நோட்டுகளின் புழக்கத்தை அக்டோபர் 2025-க்குள் குறைக்க வேண்டும் என்றும், 90% புழக்கத்தை மார்ச் 2026-க்குள் குறைக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ATM-களில் இனி ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்றும்,
எனவே பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள ரூ. 500 நோட்டுகளைச் செலவழித்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
உண்மை என்ன :-
இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என்பதை மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) உறுதி செய்துள்ளது.
ஆகஸ்ட் 3, 2025 அன்று, PIB Fact Check தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ரூ. 500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும்" என்று ஒரு பதிவை வெளியிட்டு, இந்த வதந்தியைப் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி (RBI) இதுபோன்று எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை, ரிசர்வ் வங்கி இதுபோன்ற ஒரு முக்கிய முடிவை எடுத்தால், அது தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஊடகங்கள் மூலம் மட்டுமே அறிவிக்கும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என PIB கேட்டுக்கொண்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
