400 பேர் மட்டுமே உள்ள சிறிய நாடு - வெர்டிஸ் என்ற புதிய நாட்டை உருவாக்கி 20 வயதில் அதிபரான இளைஞர் முழு விவரம்
20 Year Old Australian Man Forms New Country On Unclaimed Land Free Republic of Verdis
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞர் ஒருவர், 'வெர்டிஸ்' என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் அதிபராகியுள்ளார்
குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படாத, ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தை 'வெர்டிஸ்' குடியரசு நாடாக அறிவித்துள்ளார்
குரேஷியா(Croatia) நாடு மற்றும் செர்பியா நாட்டிற்க்கும் (Serbia) இடையேயான எல்லைப்பகுதியில், டானூப் நதியின் அருகே உரிமைகோரப்படாத 125 ஏக்கர் காட்டுப்பகுதி உள்ளது.அந்த இடத்தினை அவுஸ்திரேலிய வம்சாவளியான பிரித்தானியாவை சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன்(Daniel Jackson ) என்பவர் தனி நாடாக உருவாக்கியுள்ளார்.'
வெர்ட்டிஸ் சுதந்திர குடியரசு' ( Republic of Verdis) என்ற பெயரில் தனி கொடி மற்றும் சில சட்டங்களை உருவாக்கியுள்ளார்.வெர்டிஸின் அதிகாரபூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் ஆகிய மொழிகள் உள்ளன. யூரோவை தனது அதிகாரபூர்வ நாணயமாக பயன்படுத்துகிறது.
15,000 பேர் இந்த நாட்டின் குடியுரிமை பெற விண்ணப்பித்திருந்த நிலையில், 400 பேர் தற்போது அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு பாஸ்போர்ட் வாழங்கப்பட்டுள்ளது.
இந்த நாடு, தற்போது வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் 2வது சிறிய நாடாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://x.com/verdisgov
Tags: வெளிநாட்டு செய்திகள்
