பள்ளியில் இஸ்லாமிய தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்காக குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது!
பள்ளியில் இஸ்லாமிய தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்காக குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது!
கர்நாடகா மாநிலம், பெலகாவியில் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததில் 12 மாணவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீராம் சேனா தலைவர் சாகர் பாட்டீல், நாகனகவுடா பாட்டீல் மற்றும் கிருஷ்ணா மதரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
பள்ளி தலைமை ஆசிரியரான சுலைமான் கோரிநாயக் என்ற இஸ்லாமியரை இடமாற்றம் செய்வதற்காக விஷம் கலந்ததாக கைது செய் வாக்குமூலம் அளித்துள்ளனர்
.கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம், சவதாட்டி தாலுகாவில் உள்ள ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டது. ஜூலை 14 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக , ஸ்ரீ ராம் சேனா என்ற வலதுசாரிக் குழுவுடன் தொடர்புடைய உள்ளூர் தலைவர் உட்பட மூன்று பேரை போலீசாரை கைது செய்தனர்.
குடிநீரை அருந்திய 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, யாரும் உயிரிழக்கவில்லை
Tags: இந்திய செய்திகள்
