30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யப் புதிய மசோதா
முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யப் புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யப் புதிய மசோதா; மக்களவையில் அறிமுகம் செய்தார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா!இதன்படி 31-ஆவது நாள் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார்
முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்யப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளார்
அதன்படி, 5 வருடம் சிறை தண்டனை பெறக்கூடிய வழக்கில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களது பதவி தானாகப் பறிபோகும் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா. மசோதாவை 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்புமாறு சபாநாயகரிடம் அமித்ஷா முன்மொழிந்தார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரும் குற்றவாளிகள் அல்ல, கைதானாலே பதவி பறிப்பு என்பது அரசியல் அமைப்பை, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு:-
பாஜக அல்லாத ஒரு மாநில முதல்வராய் ஏதாவதொரு காரணத்திற்காகக் கைது செய்து 30 நாள் சிறையில் வைத்தால் அவரது பதவி பறிபோகும். கட்சியில் பெறும் குழப்பம் ஏற்படும். எதிர்கட்சியாகப் பாஜக இருந்தால் சுலபமாக ஆட்சியைப் பிடிக்கலாம். மற்றொரு பக்கம் இதைக் காரணம் காட்டியே பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளைத் தொடர்ந்து மிரட்டலாம் என எதிர்கட்சிகள் எதிர்ப்பு
Tags: இந்திய செய்திகள்
