பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் கைது
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் கைது
3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் தேடப்பட்டு வந்தார்.
2021 ஆகஸ்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். அல்லி முன்பு நடந்த விசாரணையில், அவர் ஆஜராகத் தவறியதால், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, டெல்லி சட்டப்பணிகள் ஆணையத்தின் உதவியுடன், மீரா மிதுன் டெல்லியில் இருப்பதைக் கண்டறிந்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது டெல்லி அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை, ஆகஸ்ட் 11ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
