Breaking News

மகளிர் குழுக்கடன் திட்டம் ரூ. 25 லட்சம் வரை - தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) குழுக்கடன் திட்டம் ரூ. 25 லட்சம் வரை
 


சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவர் குழுவாக சிறு தொழில் / வணிகம் செய்வதற்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது.
 

குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ. 1,25 லட்சம்.

ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம்

திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.

ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும்

குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
 

தகுதிகள் :-

பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் 

ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.

வயது: 18-60 வரை

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:-

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள். www.tabcedco.tn.gov.in. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள். மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள். ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:-

 
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். 

குடும்ப அட்டை,

ஓட்டுநர் உரிமம், 

ஆதார் அட்டை.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback