Breaking News

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து இந்தியர்கள் உள்பட 25 பேர் உயிரிழப்பு முழு விவரம் kuwait alcohol death

அட்மின் மீடியா
0
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 23 இந்தியர்கள் முழு விவரம்

குவைத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட பாதிப்பு காரணமாகக் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் இந்தியர்கள் உள்ளிட்ட 25 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உயிரிழந்தனர், 


160 பேர்வரையில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் கண்பார்வை பறிபோனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேற்காசிய நாடான குவைத்தில் கடந்த 10ம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் குடித்தது மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானோருக்கு குவைத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சை மற்றும் அவசர சிறுநீரக டயாலிசிஸ் தேவைகளுக்கான  சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும், அவர்களில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. உயரிழந்தவர்களில் ஒருவரான சச்சின் கேரள மாநிலம் கண்ணூரின் இரினவு பகுதியைச் சேர்ந்தவர்.

கள்ளச்சாராயத்தை விற்றவர்களை கண்டுபிடிக்கக் குவைத் போலீசார் சிறப்புப் படை அமைத்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய தூதரகம் உதவி எண்(+965-65501587, WhatsApp and regular calls) அறிவித்துள்ளது.

துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல்-யூசப்பின் உத்தரவைத் தொடந்து சட்டவிரோத செயல்படும் கள்ளச்சாராய உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய சோதனைகளைத் தொடங்கியது. 

அஹ்மதி கவர்னரேட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். சோதனையின் பொது விற்பனைக்குத் தயாராக இருந்த ஏராளமான கள்ளச்சாராய பாட்டில்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதன் தொடர்பாக அஹ்மதி பாதுகாப்பு படையினர் Fahaheel பகுதியில் நேபாளப் பெண்ணால் நடத்தப்பட்ட ஒரு மதுபானத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்துள்ளதாகவும், Abu Halifa பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இந்தியரைக் கைது செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது 

இதற்கிடையே உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களைத் தாயகம் அனுப்ப தேவையான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback