Breaking News

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2,250 காலி பணியிடங்கள்... முழு விபரம்!

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2,250 காலி பணியிடங்கள்... முழு விபரம்!

டிஎன்​பிஎஸ்சி மூலமாக, 400 உதவி பொறியாளர்​கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மின் வாரியத்​தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன், லைன்மேன் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்​டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்து கின்றன.தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

மின் வாரிய பணியாளர்​கள் வாரியத்​தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்​றனர்.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறியாளர் உட்பட ஒரு சில பணியிடங்களை நிரப்ப டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 

கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்கள் விரை​வில் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்நிலையில். தற்போது 400 உதவி பொறியாளர்​கள் மற்றும் 1850 கள உதவியாளர்களை டிஎன்​பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய மின் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. டிஎன்​பிஎஸ்​சி​யின் ஒருங்கிணைந்த தொழில்​நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படவுள்​ளன.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback