Breaking News

2026ல் மும்பை - அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் முழு விவரம் India’s first bullet train

அட்மின் மீடியா
0

2026ல் மும்பை - அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் முழு விவரம் India’s first bullet train



மும்பை - குஜராத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தார். மேலும் 2017 செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

மேலும் கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது 80 சதவிகித பணிகள் முடிந்துள்ளது, இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

520 கிலோமீட்டர் தூரம் கொண்ட மும்பை - அகமதாபாத்துக்கு 2 மணி நேரம் 7 நிமிடங்களில் செல்ல முடியும்.

இதற்காக ஜப்பானில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

ஜப்பானில் இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஜப்பானில் இருந்து சரக்கு கப்பல் மூலம் புல்லட் ரயில்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. விரைவில் இந்தியாவில் புல்லட் ரயில்களின் சோதனை நடைபெறும். 

புல்லட் ரயில்களின் இயக்கம், பராமரிப்பு தொடர்பாக இந்திய குழு ஜப்பானில் முகாமிட்டுள்ளது.360 ரயில்வே ஊழியர்கள், ஜப்பானில் பயிற்சி பெற உள்ளனர். 80 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய 20 சதவீதபணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் .

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback