Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,00,000 மதிப்பிலான நவீன செயற்கை அவயங்கள் இலவசம் - தமிழக அரசு அறிவிப்பு முழு விபரம்

அட்மின் மீடியா
0

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி! ரூ. 2,00,000 மதிப்பிலான நவீன செயற்கை அவயங்கள் இலவசம்

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை அவயங்கள் தயாரித்துத் தரும் திட்டம் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை அவயங்கள்

தகுதிகள்

கைக்கால் இழந்த மாற்றுத்திறனாளிகளாக இருத்தல் வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் (NIDC/UDID).

தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் அட்டை

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

வங்கிக்கணக்கு புத்தகம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை.

வழங்கப்படும் உதவிகள்

ரூ.50,000 முதல் ரூ. 2,00,000 வரையிலான நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்படும். என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், அறிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback