அடுத்த செக்…! ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடந்தால் பதிவு விபரங்களை வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டும் என பத்திர பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!
அடுத்த செக்…! ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் நடந்தால் பதிவு விபரங்களை வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டும் என பத்திர பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!
சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடக்கும் பத்திரப் பதிவு விபரங்களை வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடக்கும் பத்திரப் பதிவு குறித்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ் பொன்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அவர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.
சொத்து பரிமாற்றத்தின் போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்கம் அனுமதிக்க கூடாது.
சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது. அவ்வாறு வந்தால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த பதிவுத் துறைக்கு, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே, அனைத்து சார் - பதிவாளர்களும், இது விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் இல்லாததை, உறுதி செய்ய வேண்டும்.இது விஷயத்தில் கவனக்குறைவாக செயல்படும், சார் - பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
