Breaking News

ரயில் முன்பதிவு கட்டணத்தில் 20% சலுகை - இந்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு முழு விவரம் 20% discount on train fares

அட்மின் மீடியா
0

ரயில் முன்பதிவு கட்டணத்தில் 20% சலுகை - இந்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு முழு விவரம் 20% discount on train fares

பண்டிகைக் கால பயணம் செய்யும் பொதுமக்களின் டிக்கெட் கட்டணச் சுமையை குறைக்கும் வகையில் 20% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.



அக்.13 முதல் 26 வரை பயணம் செய்யும் பயணிகள் நவ.17 முதல் டிச.1 வரை அதே ரயிலில் ஊர் திரும்ப டிக்கெட் பதிவு செய்தால், ரிட்டன் டிக்கெட்டில் 20% தள்ளுபடி பெறலாம். 

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் இச்சலுகை கிடையாது. இந்த திட்டத்தில் 

முன்பதிவு செய்யும் டிக்கெட்டுக்கான பணம் திருப்பி தரப்படமாட்டாது என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ஊருக்கு புறப்படும் பயணம் மற்றும் அங்கிருந்து திரும்பும் பயணம் ஆகிய இரண்டிலும் குறிப்பிட்ட பயணி பயணிக்க வேண்டும். இரு டிக்கெட்டுகளிலும் பயணிகள் விவரங்கள் சரியாக பொருந்த வேண்டும்.இந்தத் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து ரயில்களுக்கும் (சிறப்பு ரயில்கள் உட்பட) பொருந்தும். 

Indian Railways has announced a 20% fare concession for return tickets to reduce the burden on passengers traveling during the festive season. 

This offer is valid for passengers traveling between October 13th and 26th, who book their return journey on the same train between November 17th and December 1st. 

The concession is not applicable to Rajdhani, Shatabdi, and Duronto trains. 

No refunds will be provided for tickets booked under this scheme.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback