Breaking News

மத்திய அரசின் பீமா சகி யோஜனா திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்களுக்கான வேலை திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி LIC Bima Sakhi Yojana 2025

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் பீமா சகி யோஜனா திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்களுக்கான வேலை திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி 

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC), LIC பீமா சகி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்த பெண்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

எல்.ஐ.சி. பீமா சகி யோஜனா திட்டத்திற்கு 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் உதவித் தொகை பெற, ஒரு பெண் ஏஜென்ட் குறைந்தது 24 புதிய காப்பீட்டுக் கொள்கைகளை விற்க வேண்டும். 

பின்னர், முதல் வருட கமிஷனாக ரூ.48,000 சம்பாதிக்க வேண்டும். போனஸ் கமிஷன் தவிர்த்து இந்தப் பணம் வழங்கப்படும்.

எல்.ஐ.சி. பீமா சகி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஏஜென்ட்கள் முதல் 3 ஆண்டுகளுக்கு பின்வரும் மாதாந்திர உதவித் தொகைகளைப் பெறுவார்கள்

முதல் வருடம்: ரூ.7,000 

இரண்டாம் வருடம்: ரூ.6,000 

மூன்றாம் வருடம்: ரூ.5,000 

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://agencycareer.licindia.in/agt_req/New_Lead_Sakhi_Candidate_Data_entry_For_NewWeb.php

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://licindia.in/lic-s-bima-sakhi

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback