Breaking News

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் அளிக்கப்படும் 17 வகையான மருத்துவ சேவைகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஆகஸ்ட் 2  முதல் மக்களின் நலம் காக்க, தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள் அமைத்து, 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கிடும் தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்.



உங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களை அறிந்து, அனைவரும் பயனடையுங்கள்

தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன... 

வாரந்தோறும் சனிக்கிழமைக ஒரு நாள் மட்டும்

முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள் SMS வாயிலாகப் பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.

Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனை முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளும் (Folders) வழங்கப்படும்.

பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள்!

பொது மருத்துவம்

பொது அறுவை சிகிச்சை மருத்துவம்

இருதய மருத்துவம்

எலும்பியல் மருத்துவம்

நரம்பியல் மருத்துவம்

தோல் மருத்துவம்

காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்

மகப்பேறு மருத்துவம்

இயன்முறை மருத்துவம்

பல் மருத்துவம்

கண் மருத்துவம்

மனநல மருத்துவம்

குழந்தைகள் நல மருத்துவம்

நுரையீரல் மருத்துவம்

நீரிழிவு நோய் மருத்துவம்

கதிரியக்கவியல் மருத்துவம்

சென்னையில் 15 மண்டலங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளனசென்னை,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback