Breaking News

இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்ற சென்னை மருத்துவர் தம்பதி உயிரிழப்பு - சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

இந்தோனேசியாவுக்கு தேனிலவு சென்ற சென்னை மருத்துவர் தம்பதி உயிரிழப்பு - சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

ஏற்கனவே பலமுறை விபத்து நடந்த கடற் பகுதியில், தவறான வழிகாட்டுதலால் மோட்டார் போட்டில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது என மனுதாரர் தரப்பு வாதம்



சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் விபூஷ்னியாவிற்கும் கடந்த 1 ஆம் தேதி மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், புதுமண தம்பதி திட்டமிட்டபடி இந்தோனேஷியா சென்றனர். அங்கே கடல் பகுதியில் மோட்டாா் போா்ட்டில் சென்று போட்டோ ஷூட் நடத்திய போது, எதிர்பாராத விதமாக இருவரும் படகிலிருந்து நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால் 2 பேரும் சடலமாக மீட்கப்பட்டார்கள்.  

இந்நிலையில் சுற்றுலாவுக்கு ஏற்பாடுகள் செய்த ஜி.டி ஹாலிடேஸ் நிறுவனத்தின் வழிகாட்டு நபரின் (Guide) தவறான வழிகாட்டுதலினால் விபூஷ்ணியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன் இருவரும் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டனர். ஏற்கனவே பல விபத்துக்கள் அந்த இடத்தில் நடந்து இருந்தும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் வழிகாட்டு நபரால் அஜாக்கிரதை மற்றும் சேவை குறைப்பாட்டினாலும் இருவரும் உயிரிழந்தனர்.எனவே, ஜி.டி ஹாலிடேஸ் சுற்றுலா நிறுவனத்தின் சேவையின்மையை பரிசீலனை செய்து 1.50 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகவும், மேலும் மகள், மருமகன் ஆகிய இருவரின் மரணத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஜி.டி ஹாலிடேஸ் சுற்றுலா நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், '' தம்பதிகளின் மரணத்தால் புகார்தாரர் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும் காப்பீடு எடுக்கத் தவறியதாலும், எச்சரிக்கையைப் பின்பற்றத் தவறியதும் தான் காரணம்'' என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடே இருவரின் உயிரிழப்புக்கு காரணம் என்பதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், திருஞானசெல்வத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாகவும் ஜி.டி ஹாலிடேஸ் நிறுவனம் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback