125 சவரன், ரூ.25 லட்சம், கார் கொடுத்தும் வரதட்சணை கொடுமை 10 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி
125 சவரன், ரூ.25 லட்சம், கார் கொடுத்தும் வரதட்சணை கொடுமை 10 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது 120நகை, 25 லட்சம் பணம், 38 லட்சம் இன்னோவா கார் உள்ளிவற்றை வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இளம்பெண் பிரீத்தி பூர்வீக சொத்து 50 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளனர்.இதனை அறிந்து சதீஷ்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பணத்தை வாங்கிவர தொந்தரவுப் படுத்தியுள்ளனர்.
இதனால் சுரேஷ் அடிக்கடி பிரீத்தியிடம் தகராறு செய்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பிரீத்தி ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தாயார் வெளியே சென்ற போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த நல்லூர் காவல்துறை அதிகாரிகள் பிரீத்தி உடலை மீட்ட நல்லூர் காவல்துறையினர் பிரேதப் பதிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இளம்பெண் பிரீத்தி தற்கொலைக்கு நீதி வேண்டி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல் ஆணையர் ராஜேந்திரன் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்.டி.ஓ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags: தமிழக செய்திகள்
