Breaking News

மதுரை மாநாடு ஏற்பாட்டில் திடீரென சாய்ந்து விழுந்த 100 அடி உயர த.வெ.க கொடிக்கம்பம் - அதிர்ச்சி காட்சி

அட்மின் மீடியா
0

மதுரை மாநாடு ஏற்பாட்டில் திடீரெனச் சாய்ந்து விழுந்த 100 அடி உயர த.வெ.க கொடிக்கம்பம் - அதிர்ச்சி காட்சி

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது

500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன

1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடையெனகளைக்கட்டி உள்ளது..

இதனிடையே தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக் கம்பம் சாய்ந்ததால் அங்குப் பரபரப்பு நிலவியது.. 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்தபோது அருகில் நின்றவர்கள் தள்ளிச்சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. இந்தக் கொடிக்கம்பம் சாய்ந்த விழுந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நொறுங்கியது.. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்டபோது அது சாய்ந்து விழுந்ததது..

நடிகர் விஜய் கொடியேற்றுவதற்காக நிறுவப்பட இருந்த இந்தக் கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததால் தவெகவின் அதிர்ச்சியில் உள்ளனர்..இந்த நிலையில் தவெக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.. அசம்பாவிதம் நடந்தது தொடர்பாகவும், இது எப்படி நடந்தது என்பது குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.. மாற்று ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-

https://x.com/polimernews/status/1958098996263543236

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback