Breaking News

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் சென்னை ஊர்க் காவல் படையில் வேலைவாய்ப்பு 2025

அட்மின் மீடியா
0


சென்னை பெருநகர ஊர்க்காவல் படை கடலோர காவல் பாதுகாப்பு படையில், ஊர்க்காவல் படையினர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்க்காவல் படையினராகப் பணியில் சேர நீச்சல் திறன் கொண்ட இளம் துடிப்பான மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்

2. சென்னை பெருநகர கடலோர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராகவும் மற்றும் மெரினா கடற்கரை காவல்நிலையத்திற்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்

3. மீனவ இளைஞர்களாக இருக்க வேண்டும் (மீனவர்கள் அடையான அட்டையைச் சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்க வேண்டும்

4. 01.08.2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

5. கடல் நீச்சல் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

6. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள்

தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தபின்னர் கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிய மெரினா கடற்கரை காவல்நிலையத்திற்கு அனுப்பப்படுவர்.

இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணிக்கு ரூ.560/ம் சிறப்பு படியாக வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களைக் கீழ்காணும் முகவரியில் இலவசமாகப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.09.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

முகவரி:

சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம்,

சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை 15.

தொலைபேசி -9566776222, 9498135373

Invitation for Applications for the post of Coastal Home Guards Greater Chennai Home Guards

The Greater Chennai Home Guards invites applications from young, energetic and interested fishermen youth who possess excellent swimming skills for appointment as coastal Home Guards.

Eligibility Criteria:

1. Applicants must have good conduct with no criminal records.

2. Applicants must be residents of Chennai City and must reside in the radius of 20 kms along the seashore of Marina, Marine Police Station of Chennai City.

3. Applicants must hold a valid Ration card.

4. Applicants must be above 18 and below 50 years of age as on 01.08.2025.

5. Applicant's educational qualification must be 10th std pass or fail.

6. Applicants must be from fishermen youth. (Necessary certificate shall be obtained from concerned district fisheries department officers)

7. Applicants must know Sea Swimming.

The selected home guards will be trained for 45 days (one-hour daily training).

After completion of the training, they will be deployed to the Marina, Marine Police Station to assist the Coastal Security Group in Chennai City coastal areas. Night Rounds and Day Patrol will be paid Rs.560/- as special allowance.

The applicants who are eligible on the above criteria can get a free application from below mentioned address and send the filled-up applications to the same address by post or in person on or before 30.09.2025 at 17.00 Hrs.

Address:

Greater Chennai Home Guards office,

JI-Saidapet Police station complex, 

Annasalai, Saidapet, Chennai-15.

Phone: 95667 76222, 94981 35373.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback