UPI வேண்டாம்.. காசு கொடுங்க”.. கர்நாடக வியாபாரிகள் அறிவிப்பு
சாலையோர கடை தொடங்கி பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் வரை தற்போது பலரும் யுபிஐ பேமெண்ட் செயலிகளான ஜிபி, போன்பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணத்தை செலுத்துகின்றார்கள்
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சில வணிகர்கள் திடீரென தங்களுடைய கடைகளில் இனி யுபிஐ பேமென்ட் ஏற்றுக்கொள்ள மாட்டோம் பணம் மட்டுமே இங்கே செல்லும் என ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள்.
இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், சிறிய வர்த்தகர்களுக்கு யுபிஐ பணப் பரிமாற்றத்தின் மூலம் ஜி.எஸ்.டி நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இது பெரும் தலைவலியாகவும், சுமையாகவும் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஓரம்கட்டி வைத்து விட்டு ரொக்கப் பணத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
ஒரு நாளைக்கு நாங்கள் 3000 ரூபாய்க்கு தான் தொழில் செய்கிறோம், அதில் ஒரு சிறிய அளவுதான் எங்களுக்கு லாபமாக கிடைக்கிறது , அதையும் வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினால் என்ன செய்வது வணிகர்கள் கூறுகின்றார்கள்
சாலையோர கடைகளை நடத்துபவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களுக்கு கூட ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறதாம். இதுவே பல்வேறு வணிகர்களும் யுபிஐ பேமென்ட்களுக்கு மாற்றாக மீண்டும் பணத்தை வழங்குமாறு கூறுவதற்கு காரணம் என தெரிய வருகிறது.
பல வணிகர்கள் தங்கள் கடைகள் மற்றும் கடைகளில் இருந்து QR குறியீடு ஸ்டிக்கர்களை அகற்றி, 'UPI இல்லை, பணம் மட்டும்' என்று எழுதப்பட்ட பலகைகளை வைத்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
