மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!
அட்மின் மீடியா
0
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
2008ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் மசூதி அருகே நமோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 101 பேர் காயமடைந்தனர்
இதில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது
17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் அனைவரையும் விடுதலை செய்து மும்பை என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு
NIA 323 சாட்சிகளை விசாரித்து, அழைப்பு தரவு பதிவுகள், குரல் மாதிரிகள், மற்றும் வெடிபொருள் ஆதாரங்களை சமர்ப்பித்தது. இருப்பினும், 30-க்கும் மேற்பட்ட சாட்சிகள் உயிரிழந்து விட்டனர்,
மேலும் 39 சாட்சிகள் தங்கள் முந்தைய வாக்குமூலங்களை மறுத்து (hostile) திருப்பி பேசினர், இது வழக்கை சிக்கலாக்கியது. நீதிபதி லஹோட்டி, தீர்ப்பில், “ஆதாரங்கள் பலவீனமாகவும், நம்பகத்தன்மை இல்லாதவையாகவும் இருப்பதால், குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை,” எனக் கூறியுள்ளார். பிரக்யா தாக்குரின் மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட ஆதாரம், “முழுமையாக நிரூபிக்கப்படவில்லை” என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு, NIA-வின் விசாரணை முறைகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் திறன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள், இந்த விடுதலையை “நீதித்துறையின் தோல்வி” என்று விமர்சித்துள்ளன.
Tags: இந்திய செய்திகள்