Breaking News

இனி கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை முழு விவரம்

அட்மின் மீடியா
0

இனி கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை முழு விவரம்



கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் இதர வணிக வங்கியில் முந்தைய ஆண்டுகளில் பயிர்க்கடன் பெற்று வட்டி மானியம் செலுத்தாமல் இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில், நடப்பாண்டில் அந்த விவசாயிகளுக்கு மட்டும் இதர வணிக வங்கிகளில் விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ளாரா என்பதை சிபில் அறிக்கையினை பெற்று உறுதி செய்த பின்னர் பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படி சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளிடம் இருந்து தடையில்லா சான்று மட்டும் பெற்றுக்கொண்டு பயிர்க்கடன் மற்றும் கால்நடை மூலதன கடன்கள் வழங்கிடலாம் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் அறிக்கை கேட்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback